Thursday, October 7, 2010

காதலின் விளிம்பு நிலை



உன் இமைச்
சிமிட்டலின்
அழகையெல்லாம்
என்னிமைகள்
கண்ணீரால் வர்ணித்துக்
கொண்டிருக்கின்றன
........................................

நீ உன் கண்களால்
மட்டும்தான் பார்க்கிறாய்
நான் என் கண்ணீராலும்
உன்னைதான் பார்க்கிறேன்
..............................................

நாம் ஒன்றாய் சிரித்த சிரிப்புகள்
என் கண்களிலிருந்து
இரட்டைத்துளிகளாய்
விரிகின்றன
...............................................

ன்னை விட்டு விலகி
நின்று பார்த்தால்
என் வானம் எல்லாம்
கண்ணீராய் தெரிகிறது

4 comments:

dheva said...

செம...!... லயித்துபோய் தான் படித்தே.. இந்த கவிதை இல்லை..

உங்களின் கடந்த எல்லா கவிதைகளையுமே...சூப்பர்...!

இளங்கோ said...

என் வலைப் பதிவில் தாங்கள் இட்ட பின்னூட்டம் வழியாக இதோ உங்கள் தளத்தில் நான்.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.

இளங்கோ said...

அப்புறம் பின்னூட்ட வசதியில் Word Verification தூக்கிருங்க.

இளங்கோ said...

My phone no : 98431 70925
Thanks