Wednesday, September 22, 2010

நீ இல்லாத பொழுதுகளில்


டிதம் வராது என தெரிந்திருந்தும்
தபால்காரரை எதிர்நோக்கும்
பெரியவரை போல காத்திருக்கேன்
நீண்ட விடுமுறையில்
விட்டுசென்ற நீ இல்லாத பொழுதுகளில்

Sunday, September 19, 2010

* காதல் இவ்வளவு கொடுமையானதா


நீ
கட்டிய

மணல்வீட்டை
இடிக்கும் குழந்தையை
கிள்ளிவிடலாம் போலிருக்கிறது
காதல்
இவ்வளவு கொடுமையானதா

குழந்தையை
வீடுகட்ட சொல்லி
நீ இடித்துவிடேன்
உன்னை கிள்ளி விடுகிறேன்
காதல்
இவ்வளவு இனிமையானதா
..........................................

ன் பிறந்த நாளில்
பிறக்க முடியாத
சோகத்தில் கிழிபடுகின்றன
மற்ற நாட்கள்
..........................................

ங்கில வகுப்புகளுக்கு
செல்லாதே
247 எழுத்துக்களும்
உன் துப்பட்டாவில்
தூக்கிட்டுக்கொள்ளும்
தமிழ் பாவம் பொல்லாதது
..........................................

காலை நேரத்தில்
ன் சுவாசம் தீண்டும் காற்று
மாசு இல்லாமல் தீண்டாவே
பூங்காவில் உட்கார்ந்து
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்

உன் சுவாசம் நுழைந்து
வெளியேறும் காற்று
மூங்கில் காட்டில்
புல்லாங்குழல்
தேடி அலைகிறது
..........................................

காதலர் தினத்தில்
உன்னை காதலிக்கிறேன்
என்று சொல்லாமல்
ஹலோ பொண்டாட்டி
என்று சொன்னாயே
அந்த நாளின் முதல் வார்த்தையில்
நான் திருமணம் செய்து கொண்டேன்
உன்னை
..........................................

நாம் சந்தித்துக் கொண்டபிறகு
நண்பனிடத்தில்
தோழியிடத்தில்
நடத்துனரித்தில்
எல்லாமாய் நீயாய் நினைத்து
பேசிக்கொண்டிருந்தேன்

ஆமாம்
நீ யாரோ பைத்தியக்காரனிடம்
பேசிக் கொண்டிருந்தாய் போல
..........................................

Tuesday, September 14, 2010

% காதலின் பாரம் %

ன்
படுக்கை அறையில்
செத்துப்போகவே
வருகிறது கொசுக்கள்
தவிர உன்னை கடிக்க அல்ல
..................................

யாருமில்லாத
லிப்டில் இனி
ஏற மாட்டேன்
நீயில்லாத போது
நோட்டுபுத்தகத்தை
கட்டிபிடிக்க வேண்டியுள்ளது
..................................

ரோ இறந்ததை
பார்த்து கண்ணீர் வடிக்கிறாய்
உன் வீட்டு வாசலில்
செத்துக் கிடக்கலாம் போலிருக்கிறது
..................................

ரண்டு பேருக்கு
ஒரு காதலி
நீ மட்டும் தான்
எனக்கும்
என் கேமிராவுக்கும்
..................................

ப்பா அம்மா விளையாட்டுக்கு
பிறகு நேரடியாக
இறுதி சுற்றுக்கு வந்து விட்டோம்
கணவன் மனைவி விளையாட்டு
என்ன ஒரு வளர்ச்சி
அடடா...
..................................


ன் ஆலய வெளியெங்கும்
குடியிருக்கும்
மீனாட்சியும் நீதான்
என் மனஅலமாரியில்
பகுத்தறிவு புத்தகமும் நீதான்
..................................

ரு முறையேனும்
நானாய் இருந்து பார்
காதலின் பாரம் தாங்கமல்
இறந்தே போவாய்
மயிலிறகு ஏற்றி வந்த
மாட்டுவண்டி
அச்சு முறிந்த
கதை தெரியும் தானே...
..................................


கோபம்...
வெறுப்பு...
துன்பம்...
இயலாமை...
துரோகம்...
இதுபோலத்தான்
காதலும் ஒரு உணர்ச்சி
என்று சொல்பவன்

உன்னை பார்க்காதவனாகத்தான்
இருப்பான்
..................................


Monday, September 13, 2010

+ நீ ஒரு அழகிய முரண்பாடு




நீ ஒரு அழகிய முரண்பாடு
என்னிடம்
பேசும்போது மட்டும்
கண்களை விடுத்து
இதயத்தால் பார்க்கிறாய்
பேசாத போதோ
இதயம் மூடி
கண்களில் மௌனிக்கிறாய்
.............................................

ன்னோடு
பேருந்தில்
பயணிக்கும் போதெல்லாம்
மணமக்கள்
இருக்கையில்
நாம் இருப்பது போலவும்
பயணிகள் எல்லாம்
வாழ்த்த வந்தவர்கள்
போலவும் தான்
இருக்கிறது
.............................................

வ்வொரு பெண்ணிடம் இருந்தும்
ஒரு கவிதையை
களவாட முடியும்தான்
என்றாலும்
உன்னிடம் மட்டும்தான்
காதலை களவாட முடிகிறது
.............................................

நீ நடக்கும் தார்ச்சாலையை
குளிப்பாட்டி மொழுகி விட
வருகிறது மழை
.............................................

நீ பேசுவதை விடவும்
மௌனம்தான் பிடிக்கிறது
மௌனம் கலைந்து வரும்
அடுத்த வார்த்தை
எனக்கானதாய் இருக்கும்
என்பதால்

உன் மௌனத்தை விடவும்
நீ பேசுவது பிடிக்கிறது
பேச்சைத் தொட்டுத் தொடரும்
மௌனத்தில்
நானிருப்பேன் என்பதால்
.............................................

னக்கெழுதிய
காதல் கடிதங்களின்
எழுத்துகளை
உள்ளங்கையால்
தடவிப் பார்க்கிறாய்
என் சட்டை பையிலிருந்த
எழுதுகோல் இதயம் குத்தி
குதூகலிக்கிறது
.............................................

வன் செய்த சிறந்த
கவிதை யாதெனில்
முத்தம் தருவதாக நெருங்கி
விழி மலர்த்த செய்து
முகம் மீது படர்ந்திருந்த
கற்றை முடியை
ஆட்காட்டி விரலால்
ஒதுக்கி விட்டு
ஒதுங்கி நின்றானே
அதுதான்
.............................................

Sunday, September 5, 2010

காதல் கீற்றுக்கள்

பிறந்த நாளுக்கு
எல்லோரும்
வாழ்த்துச் சொல்கிறார்கள்
நீ காதல் சொல்கிறாய்
அடிக்குறும்புக்காரி
நான் எதைக் கொண்டாட?
..........................................


ந்தியின் காதில்
ஏதோ கிசுகிசுத்துவிட்டு
போய்விட்டாய்

பாவம் நந்தி
எல்லோரிடமும்
புலம்பிக்கொண்டிருக்கிறது

அடிப்பாவி
என்னிடமே சொல்லி இருக்கலாம்
உன் காதலை
............................................

குழந்தைக்கு
பெயர் வைக்க
எழுதித்தந்த
அத்தனை பெயர்களையும்
நிராகரித்துவிட்டு

சிரித்துக்கொண்டே
ஒரு ஆணின் பெயரை
பெயரிட்டாய்

முதல் காதலில்
தோற்றவள் என தெரிந்தது

இப்படித்தான்
என்பெயரும்
இடப்பட்டு இருக்குமோ
ஏதோ ஒரு குழந்தைக்கு
.................................................


குழந்தையின்
கையசைப்பை
வேறு வேறு திசைகளில்
இருந்து ரசிக்கிறோம்

ஏதேச்சையாய்
பார்வை முட்டிக்கொள்ள

நான் குழந்தையாகினேன்
நீயும் குழந்தையாக மாறேன்

கையசைப்போம்
காதலுக்கு
..................................

Saturday, September 4, 2010

* *காதல் வாங்கினால், முத்தம் இலவசம்

குழந்தையில்
உனக்கு வைத்தது போக
மீதிப் பெயர்களை எல்லாம்
உன் தெருக் குழந்தைகளுக்கு
சூட்டிவிட்டார்கள் போல
இவ்வளவு அழகாக வளர்ந்து
நிற்கிறார்களே
................................

காதலின் தயக்கங்களை
உன் செவ்வாயில்
அடக்கி வைக்காதே
ஏதாவது ஒரு திங்களில்
வெளிப்பட்டுவிடும்
பருக்களாக
................................

ழகழகாய்
பூத்துக் கிடக்கின்றன
காதல் வார்த்தைகள்
உதடுகளில்

வந்து உதடுகளால்
உலுக்கிவிடு

இதயம் நிரம்பட்டும்
................................

ன்னை காதலித்தப் பிறகு
தலையணை நனைத்ததே இல்லை
விழிகளில் என்றாய்

பிறகு என்ன
தலையணை அணைக்கிறாயா
என்றேன்

நெற்றிச் சுருக்கி
வெட்கமாய் பார்க்கிறாய்
தலையணையாய்
மாறிப்போயிருந்தேன்
................................

ம் வாழ்க்கைப் புத்தகத்தில்
முதல் வரி நீ
இரண்டாம் வரி நான்
மீதியை
காதல் நிரப்புவோம் வா
................................

ருசக்கர வாகன
பயணத்தில்
நடுவில் புத்தகத்தடை
வைக்காதே
என் பூமிப்பந்து
விலகி விடுகிறது
உன்னிலிருந்து
................................

Thursday, September 2, 2010

# கவிதைக்காரி


விதை
வாடகைக்கு

குடியிருக்கும் பகுதி
நீ இருக்கும் மகளிர் விடுதி
.................................

ன்னைப் பற்றி
கவிதைச் சொல்ல சொன்னாய்
இரண்டு கவிதைகள் சொன்னேன்
இவ்வளவுதானா
என செல்லமாய் சிணுங்கினாய்
இன்னொரு கவிதையாய்
இருந்தது
.....................................................

பேருந்து நிழற்குடையில்
ஒழுகும் மழைத்துளியை
கையில் வாங்கி
விளையாடிக் கொண்டிருக்கிறாயா?
இல்லை
மழையை தாலாட்டிக்
கொண்டிருக்கிறாயா?
........................................

ந்தவனத்தில் இருந்து
மல்லிகைச் செடி
நகர்ந்து வருவது போலிருக்கிறது
உன் வெளியேற்றம்.