Thursday, September 2, 2010

# கவிதைக்காரி


விதை
வாடகைக்கு

குடியிருக்கும் பகுதி
நீ இருக்கும் மகளிர் விடுதி
.................................

ன்னைப் பற்றி
கவிதைச் சொல்ல சொன்னாய்
இரண்டு கவிதைகள் சொன்னேன்
இவ்வளவுதானா
என செல்லமாய் சிணுங்கினாய்
இன்னொரு கவிதையாய்
இருந்தது
.....................................................

பேருந்து நிழற்குடையில்
ஒழுகும் மழைத்துளியை
கையில் வாங்கி
விளையாடிக் கொண்டிருக்கிறாயா?
இல்லை
மழையை தாலாட்டிக்
கொண்டிருக்கிறாயா?
........................................

ந்தவனத்தில் இருந்து
மல்லிகைச் செடி
நகர்ந்து வருவது போலிருக்கிறது
உன் வெளியேற்றம்.

2 comments:

அருண் said...

முதலாவது மூன்றே வரியில் நச்,எல்லாமே நல்லாயிருக்கு.

Azhagan said...

நன்றி தோழர் ...உங்கள் வார்த்தை மேலும் என்னை உற்சாகபடுத்துகிறது