Friday, October 29, 2010

பெண்களிடம் நல்ல பெயர் வாங்க !!!!!


ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....


1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)

3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.


6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.

Thursday, October 7, 2010

காதலின் விளிம்பு நிலைஉன் இமைச்
சிமிட்டலின்
அழகையெல்லாம்
என்னிமைகள்
கண்ணீரால் வர்ணித்துக்
கொண்டிருக்கின்றன
........................................

நீ உன் கண்களால்
மட்டும்தான் பார்க்கிறாய்
நான் என் கண்ணீராலும்
உன்னைதான் பார்க்கிறேன்
..............................................

நாம் ஒன்றாய் சிரித்த சிரிப்புகள்
என் கண்களிலிருந்து
இரட்டைத்துளிகளாய்
விரிகின்றன
...............................................

ன்னை விட்டு விலகி
நின்று பார்த்தால்
என் வானம் எல்லாம்
கண்ணீராய் தெரிகிறது

Wednesday, October 6, 2010

காதலில் உதிர்ந்தாய்


எப்போது வேண்டுமானாலும்
அந்த மரம்பட்டு போகலாம்
நீ என்னை விட்டுபோகலாம்
திடீர் மழை வரலாம்
நீயும் திரும்பி வரலாம்
.................................

நட்பை வேரோடு
பிடிங்கி பார்த்தால்
காதல் காய்த்திருக்கும்
நீ மட்டும் தான்
காதல் என்ற வார்த்தையில்
பூத்து
காதலில் உதிர்ந்தாய்
.................................

என் மையிலும்
உதட்டிலும்
மிச்சிமிருக்கிறது
உன்னைப் பற்றிய
கவிதையும் காதலும்
.................................

உன் குடத்தில் தழும்பி
இடுப்பில் தற்கொலை
செய்துக் கொள்ளும்
தண்ணீர்
இடை தொடாமல்
இருக்க என் கைகளால்
தடுப்புசுவர்
வைத்துக்கொள்ளேன்
.................................

சட்டை பொத்தான்
கழட்டுவதும்
பிடறிமுடி இழுப்பதும்
தேகம் மீது படரும்
மூச்சுக்காற்று
இவ்வளவு நெருக்கத்தில்
நீ என்ன பேசினால்
எனக்கென்ன
.................................

ஒற்றைச் சவப்பெட்டியில்
இரட்டைப் பிணங்களாவோம்
நீயும் நானும்
................................

Wednesday, September 22, 2010

நீ இல்லாத பொழுதுகளில்


டிதம் வராது என தெரிந்திருந்தும்
தபால்காரரை எதிர்நோக்கும்
பெரியவரை போல காத்திருக்கேன்
நீண்ட விடுமுறையில்
விட்டுசென்ற நீ இல்லாத பொழுதுகளில்

Sunday, September 19, 2010

* காதல் இவ்வளவு கொடுமையானதா


நீ
கட்டிய

மணல்வீட்டை
இடிக்கும் குழந்தையை
கிள்ளிவிடலாம் போலிருக்கிறது
காதல்
இவ்வளவு கொடுமையானதா

குழந்தையை
வீடுகட்ட சொல்லி
நீ இடித்துவிடேன்
உன்னை கிள்ளி விடுகிறேன்
காதல்
இவ்வளவு இனிமையானதா
..........................................

ன் பிறந்த நாளில்
பிறக்க முடியாத
சோகத்தில் கிழிபடுகின்றன
மற்ற நாட்கள்
..........................................

ங்கில வகுப்புகளுக்கு
செல்லாதே
247 எழுத்துக்களும்
உன் துப்பட்டாவில்
தூக்கிட்டுக்கொள்ளும்
தமிழ் பாவம் பொல்லாதது
..........................................

காலை நேரத்தில்
ன் சுவாசம் தீண்டும் காற்று
மாசு இல்லாமல் தீண்டாவே
பூங்காவில் உட்கார்ந்து
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்

உன் சுவாசம் நுழைந்து
வெளியேறும் காற்று
மூங்கில் காட்டில்
புல்லாங்குழல்
தேடி அலைகிறது
..........................................

காதலர் தினத்தில்
உன்னை காதலிக்கிறேன்
என்று சொல்லாமல்
ஹலோ பொண்டாட்டி
என்று சொன்னாயே
அந்த நாளின் முதல் வார்த்தையில்
நான் திருமணம் செய்து கொண்டேன்
உன்னை
..........................................

நாம் சந்தித்துக் கொண்டபிறகு
நண்பனிடத்தில்
தோழியிடத்தில்
நடத்துனரித்தில்
எல்லாமாய் நீயாய் நினைத்து
பேசிக்கொண்டிருந்தேன்

ஆமாம்
நீ யாரோ பைத்தியக்காரனிடம்
பேசிக் கொண்டிருந்தாய் போல
..........................................

Tuesday, September 14, 2010

% காதலின் பாரம் %

ன்
படுக்கை அறையில்
செத்துப்போகவே
வருகிறது கொசுக்கள்
தவிர உன்னை கடிக்க அல்ல
..................................

யாருமில்லாத
லிப்டில் இனி
ஏற மாட்டேன்
நீயில்லாத போது
நோட்டுபுத்தகத்தை
கட்டிபிடிக்க வேண்டியுள்ளது
..................................

ரோ இறந்ததை
பார்த்து கண்ணீர் வடிக்கிறாய்
உன் வீட்டு வாசலில்
செத்துக் கிடக்கலாம் போலிருக்கிறது
..................................

ரண்டு பேருக்கு
ஒரு காதலி
நீ மட்டும் தான்
எனக்கும்
என் கேமிராவுக்கும்
..................................

ப்பா அம்மா விளையாட்டுக்கு
பிறகு நேரடியாக
இறுதி சுற்றுக்கு வந்து விட்டோம்
கணவன் மனைவி விளையாட்டு
என்ன ஒரு வளர்ச்சி
அடடா...
..................................


ன் ஆலய வெளியெங்கும்
குடியிருக்கும்
மீனாட்சியும் நீதான்
என் மனஅலமாரியில்
பகுத்தறிவு புத்தகமும் நீதான்
..................................

ரு முறையேனும்
நானாய் இருந்து பார்
காதலின் பாரம் தாங்கமல்
இறந்தே போவாய்
மயிலிறகு ஏற்றி வந்த
மாட்டுவண்டி
அச்சு முறிந்த
கதை தெரியும் தானே...
..................................


கோபம்...
வெறுப்பு...
துன்பம்...
இயலாமை...
துரோகம்...
இதுபோலத்தான்
காதலும் ஒரு உணர்ச்சி
என்று சொல்பவன்

உன்னை பார்க்காதவனாகத்தான்
இருப்பான்
..................................


Monday, September 13, 2010

+ நீ ஒரு அழகிய முரண்பாடு
நீ ஒரு அழகிய முரண்பாடு
என்னிடம்
பேசும்போது மட்டும்
கண்களை விடுத்து
இதயத்தால் பார்க்கிறாய்
பேசாத போதோ
இதயம் மூடி
கண்களில் மௌனிக்கிறாய்
.............................................

ன்னோடு
பேருந்தில்
பயணிக்கும் போதெல்லாம்
மணமக்கள்
இருக்கையில்
நாம் இருப்பது போலவும்
பயணிகள் எல்லாம்
வாழ்த்த வந்தவர்கள்
போலவும் தான்
இருக்கிறது
.............................................

வ்வொரு பெண்ணிடம் இருந்தும்
ஒரு கவிதையை
களவாட முடியும்தான்
என்றாலும்
உன்னிடம் மட்டும்தான்
காதலை களவாட முடிகிறது
.............................................

நீ நடக்கும் தார்ச்சாலையை
குளிப்பாட்டி மொழுகி விட
வருகிறது மழை
.............................................

நீ பேசுவதை விடவும்
மௌனம்தான் பிடிக்கிறது
மௌனம் கலைந்து வரும்
அடுத்த வார்த்தை
எனக்கானதாய் இருக்கும்
என்பதால்

உன் மௌனத்தை விடவும்
நீ பேசுவது பிடிக்கிறது
பேச்சைத் தொட்டுத் தொடரும்
மௌனத்தில்
நானிருப்பேன் என்பதால்
.............................................

னக்கெழுதிய
காதல் கடிதங்களின்
எழுத்துகளை
உள்ளங்கையால்
தடவிப் பார்க்கிறாய்
என் சட்டை பையிலிருந்த
எழுதுகோல் இதயம் குத்தி
குதூகலிக்கிறது
.............................................

வன் செய்த சிறந்த
கவிதை யாதெனில்
முத்தம் தருவதாக நெருங்கி
விழி மலர்த்த செய்து
முகம் மீது படர்ந்திருந்த
கற்றை முடியை
ஆட்காட்டி விரலால்
ஒதுக்கி விட்டு
ஒதுங்கி நின்றானே
அதுதான்
.............................................