
நீ கட்டிய
மணல்வீட்டை
இடிக்கும் குழந்தையை
கிள்ளிவிடலாம் போலிருக்கிறது
காதல்
இவ்வளவு கொடுமையானதா
குழந்தையை
வீடுகட்ட சொல்லி
நீ இடித்துவிடேன்
உன்னை கிள்ளி விடுகிறேன்
காதல்
இவ்வளவு இனிமையானதா
..........................................
உன் பிறந்த நாளில்
பிறக்க முடியாத
சோகத்தில் கிழிபடுகின்றன
மற்ற நாட்கள்
..........................................
ஆங்கில வகுப்புகளுக்கு
செல்லாதே
247 எழுத்துக்களும்
உன் துப்பட்டாவில்
தூக்கிட்டுக்கொள்ளும்
தமிழ் பாவம் பொல்லாதது
..........................................
காலை நேரத்தில்
உன் சுவாசம் தீண்டும் காற்று
மாசு இல்லாமல் தீண்டாவே
பூங்காவில் உட்கார்ந்து
சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்
உன் சுவாசம் நுழைந்து
வெளியேறும் காற்று
மூங்கில் காட்டில்
புல்லாங்குழல்
தேடி அலைகிறது
..........................................
காதலர் தினத்தில்
உன்னை காதலிக்கிறேன்
என்று சொல்லாமல்
ஹலோ பொண்டாட்டி
என்று சொன்னாயே
அந்த நாளின் முதல் வார்த்தையில்
நான் திருமணம் செய்து கொண்டேன்
உன்னை
..........................................
நாம் சந்தித்துக் கொண்டபிறகு
நண்பனிடத்தில்
தோழியிடத்தில்
நடத்துனரித்தில்
எல்லாமாய் நீயாய் நினைத்து
பேசிக்கொண்டிருந்தேன்
ஆமாம்
நீ யாரோ பைத்தியக்காரனிடம்
பேசிக் கொண்டிருந்தாய் போல
..........................................
4 comments:
கணக்கிறது கவிதை
வலி கொண்ட இதயத்திற்கு ஒரே வழி கவிதை...... உங்கள் வலி புரிவேன் தல....!
Super annae.. Kavithai sunamiyaga maara advance wishes..
//உன் பிறந்த நாளில்
பிறக்க முடியாத
சோகத்தில் கிழிபடுகின்றன
மற்ற நாட்கள்//ரொம்ப நல்லாயிருக்கு,எல்லாமே அருமை.
Post a Comment